July 9, 2026

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா காவல் துறை அறிவிப்பு

ஒட்டாவா: காலிஸ்​தான் பிரி​வினை​வா​தி​யான ஹர்​தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடி​யுரிமை பெற்று அந்​நாட்​டில் வசித்து வந்​தார். தடை செய்​யப்​பட்ட காலிஸ்​தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலை​வ​ராக இருந்த நிஜ்ஜார் தீவிர​வா​தி​ என கடந்த 2020-ல் இந்​தியா அறி​வித்​தது.

இந்​நிலை​யில் கடந்த 2023 ஜூனில் கனடா​வின் சர்ரே நகரில் முகமூடி அணிந்த இரு​வ​ரால் நிஜ்ஜார் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், ட்ரூடோவுக்கு பிறகு வந்த, மார்க் கார்னி தலை​மையி​லான அரசு மீண்​டும் இந்தியாவுடன் தங்​கள் உறவை கட்​டி​யெழுப்​பத் தொடங்கியுள்ளது.

இந்​நிலை​யில், நிஜ்ஜார் கொலை வழக்​கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலை சேர்ந்​தவர்​கள் உட்பட 24 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ள​தாக அமெரிக்கா அறி​வித்​தது. தற்​போது இந்திய சிறை​யில் இருக்​கும் லாரன்ஸ் பிஷ்னோய், வட அமெரிக்கா​வில் உள்ள அவரது உதவி​யாளர் கோல்டி ப்ரார் ஆகியோர் இணைந்து நிஜ்ஜாரை கொலை செய்ததாக அமெரிக்கா குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இந்த அறி​விப்​பு வெளியான சில மணி நேரத்​தில் கனடா​வின் ராயல் கனடியன் மவுண்​டட் போலீஸ் (ஆர்​சிஎம்​பி) துணை கமிஷனர் லிசா மோர்லாண்ட் நேற்று கூறுகையில், “இந்திய அரசை இந்த வழக்குடன் இணைக்கும் வகையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேற்கொள்ளப்பட்ட கைது, பறிமுதல் நடவடிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது” என்றார்.

Spread the love