June 17, 2026

நீர்ப்பிடிப்பு பகுதியில் சோலார் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் சோலார் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வளநாடு ஊராட்சிக்குட்பட்ட வளநாடு, சொங்கற்படை, தெய்வதனம், இந்திரா நகர் மற்றும் கருப்பிள்ளைமடம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள், நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைக்கப்படும் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி நீர்ப்பிடிப்பு நிலங்களில் தனியார் நிறுவனம் சோலார் திட்டப் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைநீர் சேமிப்பு பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையில் சிக்கல் ஏற்படும் என கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபெறும் சோலார் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி, அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நீர்வள ஆதாரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் ஐந்து கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Spread the love