அடிப்படை வசதிகள் கோரி சக்கரவாள நல்லூர் மக்கள் ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாள நல்லூர் கிராம மக்கள், சாலை, குடிநீர், பேருந்து, தெருவிளக்கு மற்றும் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், மழைக்காலங்களில் சாலை மற்றும் வடிகால் வசதியின்மை காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு