October 14, 2026

பசுமைப் பட்டாசுகளை டெல்லியில் அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: டெல்லி காற்று மாசு தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்​வந்து விசா​ரணைக்கு எடுத்த வழக்​கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் நீதிப​தி​கள் ஜாய் மால்யா பக்​‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது பட்டாசு வணி​கர்​கள் கூட்​டமைப்பு சார்​பில், மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் ஆஜராகி, டெல்​லி​யில் பட்​டாசுக்கு முழுவது​மாக தடை விதிக்​கப்​பட்​டுள்ள விவ​காரம் குறித்து எடுத்துரைத்​தார். நாடு முழு​வதும் பண்​டிகை காலங்​களில் பட்​டாசு வெடிக்க அனுமதி இருக்​கும் நிலை​யில் டெல்​லி​யில் முழு​வது​மாக முடக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் இதை நீக்கி கட்​டுப்​பாடு​களு​டன் அனு​மதி வழங்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​னார்.

இதையடுத்து, முதி​ய​வர்​கள், குழந்​தைகள், நோயாளி​கள் பாதிக்​காத வகை​யில் மாசு குறைந்த பசுமைப் பட்​டாசுகளை விற்​பனை செய்​ய​வும், வெடிக்​க​வும் அனு​ம​திக்​கலாம் என நீதிபதிகள் தெரி​வித்​தனர். பட்​டாசு விற்​பனை மற்​றும் பயன்​பாடு தொடர்​பாக ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வு​கள் முறை​யாக அமல்​படுத்​தப்பட வேண்​டும் என்​று அறி​வுறுத்​தி​யதோடு, வழக்கை விரி​வான வி​சா​ரணைக்​காக வரும்​ 15-ம்​ தேதி​க்​கு ஒத்​திவைத்​தனர்​.

Spread the love