பிறந்த முதல் 28 நாட்கள் குழந்தையின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம். இந்த நாட்களில் பெற்றோர் தவிர்க்க வேண்டிய முக்கியத் தவறுகள் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
- பசி அறிகுறிகளைப் புறக்கணித்தல்: அழும் வரை காத்திருக்காமல், குழந்தை கைகளை வாயில் வைப்பது, பால் தேடித் தலையைத் திருப்புவது போன்ற அறிகுறிகளைக் கவனித்து உணவளிக்க வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது; தண்ணீர் உள்ளிட்டவற்றை மருத்துவர் ஆலோசனையின்றிக் கொடுக்க வேண்டாம்.
- அதிக ஆடைகளை அணிவித்தல்: குழந்தையின் மார்பு அல்லது முதுகைத் தொட்டு உடல் சூட்டைச் சரிபார்த்து, அறையின் வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
- பாதுகாப்பற்ற தூக்கம்: குழந்தையை மல்லாக்க, உறுதியான சமமான படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். தலையணை, தளர்வான போர்வை, மென்மையான பொம்மைகளைப் படுக்கையில் வைக்கக் கூடாது.
- வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துதல்: கண்களில் மை இடுவது, தோலில் பவுடர் பூசுவது, மூக்கு அல்லது காதில் எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைத் தொடுவதற்கு முன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
- எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்துதல்: பால் குடிக்க மறுத்தல், மூச்சுத் திணறல், அதிகச் சோர்வு, காய்ச்சல் அல்லது மஞ்சள் நிறம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தையின் உடல்நிலை குறித்து சந்தேகம் ஏற்பட்டால் சுய வைத்தியம் செய்யாமல், குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

More Stories
படிக்கட்டில் ஏறினாலே மூச்சு வாங்குகிறதா? காரணங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்!
கை, கால்களில் திடீர் வீக்கம்: கவனம் தேவை!
காலை உணவில் கவனிக்க வேண்டிய 4 உணவுகள்!