இராசிபுரம் :
ராசிபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல் – ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 200 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர்.
மங்களபுரம் காவல் உதவி ஆய்வாளர் சந்தியா தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணியளவில் ராசிபுரம் – ஆத்தூர் சாலையில் உள்ள கொம்பேத்தங்கள்மேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆத்தூரில் இருந்து மங்களபுரம் நோக்கி வந்த TN 91 V 2172 என்ற பதிவு எண் கொண்ட கிரெட்டா காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து காருடன் ஹான்ஸ் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் (30), நேனா ராமின் மகன் ஹனுமானா ராம் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜிகினி பகுதியில் மார்க்கெட் அருகே வசித்து வந்துள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்களபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories
தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை தடுத்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று பா.ஜ.எச்சரித்துள்ளது.
ஒட்டன்சத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டச்சாலையில் செயலிழந்த மின் விளக்கு பெயர் பலகை, செயற்கை நீரூற்று!மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!.
கருரில் திமுக செயற்குழு கூட்டம்