ஆசிய விளையாட்டு படகு போட்டியில் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், சல்மான் கான் ஜோடி பந்தய தூரத்தை 6:13.25 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
சீனாவின் யி சுடி, யிடே நீ ஜோடி பந்தய தூரத்தை 6:09.37 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானின் பாவெல் சோரின், மெஹ்ரோஜ்பெக் மமத்குலோவ் (6:10.49) 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
இந்திய ஜோடி 1,500 மீட்டர் வரை இரண்டாவது இடத்தைத் தக்க வைத்திருந்தது. ஆனால் கடைசி 500 மீட்டரில் மூன்றாவது இடத்துக்கு சரிந்தது. இந்திய ஜோடி தங்கம் வென்றவர்களை விட 3.88 வினாடிகள் பின்தங்கி போட்டியை நிறைவு செய்தது. சத்னம் சிங், சல்மான் கான் ஜோடி.

More Stories
ஆசிய விளையாட்டு போட்டி: வுஷுவில் வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி
ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டி: 4X400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றது இந்திய அணி