September 25, 2026

படகு போட்டியில் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்

ஆசிய விளையாட்டு படகு போட்​டி​யில் ஆடவருக்​கான டபுள் ஸ்கல்ஸ் பிரி​வில் இந்தியாவின் சத்​னம் சிங், சல்​மான் கான் ஜோடி பந்தய தூரத்தை 6:13.25 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்கம் வென்​றது. ஆசிய விளை​யாட்​டில் ஆடவருக்​கான டபுள் ஸ்கல்ஸ் பிரி​வில் இந்​தியா பதக்​கம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும்.

சீனா​வின் யி சுடி, யிடே நீ ஜோடி பந்தய தூரத்தை 6:09.37 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கத்​தை​யும், உஸ்​பெகிஸ்​தானின் பாவெல் சோரின், மெஹ்ரோஜ்பெக் மமத்​குலோவ் (6:10.49) 2-வது இடத்தை பிடித்து வெள்​ளிப் பதக்கத்தையும் வென்​றது.

இந்​திய ஜோடி 1,500 மீட்​டர் வரை இரண்​டாவது இடத்​தைத் தக்க வைத்​திருந்​தது. ஆனால் கடைசி 500 மீட்​டரில் மூன்​றாவது இடத்​துக்கு சரிந்​தது. இந்​திய ஜோடி தங்கம் வென்​றவர்​களை விட 3.88 வினாடிகள் பின்​தங்கி போட்​டியை நிறைவு செய்​தது. சத்னம் சிங், சல்மான் கான் ஜோடி.

Spread the love