February 19, 2026

பத்மஸ்ரீ விருது பெற்ற 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை

வடிவேல்,​ மாசி

வடிவேல்,​ மாசி

செங்கல்பட்டு: பத்மஸ்ரீ விருது பெற்ற செங்​கல்​பட்டு மாவட்​டத்தை சேர்ந்த 2 பாம்பு பிடி வீரர்​களின் வாரிசுகளுக்கு அரசு பள்​ளி​யில் வேலைக்​கான ஆணையை ஆட்​சி​யர் சினேகா நேற்று வழங்​கி​னார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் திருக்​கழுகுன்​றம் அருகே சென்​னேரி கிராமத்​தில் இருளர் பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்​களான வடிவேல்,​ மாசி ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்​றனர். இவர்​கள் விலங்​கு​கள் நல பிரி​வில் பத்மஸ்ரீ விருதைப் பெற்​றனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இரு​வரும் அபாயகர​மான மற்​றும் விஷம் கொண்ட பாம்பு​களை பிடிப்​ப​தில் கைதேர்ந்​தவர்​கள். உலகம் முழு​வதும் பல நாடு​களுக்கு பயணித்து கொடிய விஷ​முள்ள பாம்பு​களை பிடித்து சாதனை செய்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் வடிவேல் மகன் சுரேஷ், மாசி மகன் தங்​க​ராசு ஆகியோ​ருக்கு அவர்​களின் கல்வி தகுதி அடிப்​படை​யில் வண்​டலூர் அரு​கே​யுள்ள குமிழி அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறை​விட மேல்​நிலைப் பள்​ளி​யில் தோட்டப் பராமரிப்​பாளர் மற்​றும் இரவு காவலர் பணி தமிழக அரசால் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் பள்​ளி​யில் பணி புரிவதற்​கான நியமன ஆணையை ஆட்​சி​யர் சினேகா நேற்று வழங்​கி​னார். மாவட்ட வரு​வாய் அலு​வலர் மா.கணேஷ் குமார், மாவட்ட ஆதி​தி​ரா​விடர் நல அலு​வலர் சுந்​தர்​, அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ​ உடன்​ இருந்​தனர்​.

Spread the love