பழனி செப்டம்பர் 18
பழனி அடிவாரத்தில் இருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. பின்பு பழனி பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் அருண், அஜித் குமார், பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, விஷ்வ ஹிந்து பரிஷத் செந்தில் ஜி, மதுரை கோட்ட தலைவர் பாலன், மாவட்ட செயலாளர்கள் ராஜா, அழகர் ரகு கருப்புச்சாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பழனியில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும், சுமார் 150 விநாயகர் சிலைகள் வந்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் சரக சசிமோகன், மாவட்ட போலீஸ் எஸ் பி ஜெயக்குமார், பழனி டிஎஸ்பி தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்

More Stories
ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து கார், வீடு சேதம்
திங்க் கேஸ்’ நிறுவனம் மாசுபாட்டை குறைக்க புதிய முயற்சி
இராமநாதபுரம் மாவட்டம்