ராமநாதபுரத்தில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து ‘திங்க் கேஸ்’ நிறுவனம் அரசு பேருந்துகளுக்கான பிரத்யேக சிஎன்ஜி நிலையத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுக்கு சிஎன்ஜி எரிபொருள் வழங்குகின்றனர். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 220 கி.மீ. வரை பேருந்துகள் இயக்கப்படும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் தற்போது 10 சிஎன்ஜி நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் இதுவரை 3,036 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும். இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரித்து வாகன மாசுபாட்டை குறைப்பதாகவும் நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது

More Stories
ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து கார், வீடு சேதம்
இராமநாதபுரம் மாவட்டம்
இந்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விதர்சன ஊர்வலம்