October 14, 2026

பழனியில் குதிரை வண்டி குதிரைகளுக்கு தடுப்பூசி முகாம்

 பழனி அக்டோபர் 14 

பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் குதிரை வண்டிகளில், பழனி பஸ் நிலையத்திலிருந்து அடிவாரம் முருகன் கோவில் வரை செல்வார்கள்.  அதேபோல் சண்முக நதிக்கும் குதிரை வண்டியில் செல்வார்கள். குறிப்பாக கேரளா பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி பழனியில் குதிரை வண்டிகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில் குதிரை வண்டிகளை இழுத்துச்  செல்லும் குதிரைகளின்  உடல் நலனை பாதுகாக்கும் வகையில், கொடைக்கானலைச் சேர்ந்த, தனியார் அமைப்பு சார்பில், பழனியில் உள்ள குதிரைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் பழனி நகராட்சி  ஆணையர் ராஜ லட்சுமி, சுகாதார அலுவலர்கள்  செந்தில் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Spread the love