April 25, 2026

பழனியில் ரூபாய் 69. 10 கோடி செலவில் ரயில்வே சாலை மேம்பாலம்  கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது 

அமைச்சர்  அர சக்கரபாணி ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ பங்கேற்பு

 பழனி மார்ச் 6

 பழனியில் ரூபாய் 69. 10 கோடி செலவில் ரயில்வே சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. பழனியில் நெடுஞ்சாலை துறை  மதுரை நெடுஞ்சாலை திட்டங்கள் வட்டம் மதுரை நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்டம் ஆகியவை சார்பில்  பழனி டு தாராபுரம் சாலையிலும் பழனி டு உடுமலை பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் கட்டும் பணி பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் பணிகளைத் தொடங்கி வைத்து அமைச்சர் அரசு சக்கரபாணி பேசியதாவது: பழனிக்கு இரண்டு பெரிய திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பழனி அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்காக ரூபாய் 70 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் முதற்கட்டமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று பழனி டு தாராபுரம் ரயில்வே சாலை பழனி உடுமலை ரயில்வே சாலை ஆகிய இடங்களில் சாலை மேம்பாலம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்ட பின்பு, பழனி தாராபுரம் ஈரோடு திருப்பூர் கரூர் உள்பட பத்து மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் பயன்பெறுவார்கள். இனிமேல் பயணிகள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை. முதலில் இப்பாலம் இருவழிச் சாலையாக போடப்பட்டிருந்தது. அதன் பின்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் ஐபி செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது: பழனி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழனி தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாவட்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூபாய் 70 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு முதற்கட்ட கட்டிடங்களுக்கு திறப்பு விழா நடைபெற்றுள்ளது. அதற்கு காரணமான தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர சக்கரபாணி ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் ஆர் செல்வராஜ், சென்னை தலைமை பொறியாளர் ஆர் கிருஷ்ணசாமி, மதுரை கோட்ட பொறியாளர் கே ஆர் சுரேஷ் பாபு, கண்காணிப்பு பொறியாளர் ஆர் கே ரமேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகரன், பழனி நகர திமுக செயலாளர் வேலுமணி, நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, தொப்பம்பட்டி திமுக நிர்வாகிகள் பொன்ராஜ், கிருஷ்ணசாமி, ராஜாமணி, பழனி திமுக  ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டியன், சாமிநாதன், மற்றும் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் நிர்வாகிகள் எஸ்வி நாகேஸ்வரன், பாலசுப்ரமணியன், சீனிவாசன் உள்பட  ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

Spread the love