August 8, 2026

பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார் 

பழனி ஆகஸ்ட் 8 

பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில்  தனி நபர்களுக்கு ரூபாய் 2 கோடிக்கு கிரயமாக பத்திரப்பதிவு  செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது பற்றிய சிபிசிஐடி போலீஸ் சார் தீவிரமாக விசாரித்து  வருகின்றனர். இதை ஒட்டி  நிலத்தை விற்பனை செய்த ஆசிரியர் முருகதாஸ் மற்றும் நிலத்தை வாங்கிய  வெள்ளத்துரை வயது 60 மற்றும் சேதுபதி வயது 66 அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன் குளம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் அன்வர் தீன் வயது 65 ஆகிய நான்கு பேரையும் சி பி சி டி போலீசார்ஏற்கனவே கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை சிறையில் இருந்த பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர் தீன் வயது 65 என்பவர் நேற்று இரவு நெஞ்சுவலியால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது இச்செய்தி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Spread the love