பழனி ஜூன் 10
பழனி அருகே உள்ளது 54 புதூர் இந்த ஊரைச் சேர்ந்தவர் மலையப்பன் இவரது மனைவி சின்ன பொண்ணு வயது 55. இவர் நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார் பின்பு மதிய உணவு இடைவேளையின் பொழுது உணவு அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழே அமர்ந்திருந்தார் அப்பொழுது திடீரென்று ஒரு மரக்கிளை முறிந்து சின்ன பொண்ணுவின் மீது விழுந்தது இதில் அவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் இது பற்றி பழனி கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்