June 26, 2026

பழனி சண்முக நதியில் ஆய்வு செய்தார்

 மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை த் துறை அமைச்சர் விக்னேஷ்

 பழனி ஜூன் 26

 பழனி சண்முக நதியில் தமிழக அமைச்சர் விக்னேஷ் ஆய்வு செய்தார்.

 பழனி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை தாங்கினார். ஜமாபந்தியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். பின்பு அவர் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு அவர் பழனி வையாபுரி குளம், சண்முகநதி, பெரியாவுடையார் கோவில்  ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பழனி கோவில் அருகில் உள்ள வையாபுரி குளம், சண்முகநதி ஆகியவை மாசு அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும், வையாபுரி குளத்தையும் சண்முக நதியையும் தூர் வார்வதற்காக ஆய்வு செய்தேன், அதற்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்க வேண்டும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அகற்றப்படும், டாஸ் மாக் மதுக்கடைகளை  தனியாருக்கு  விடும் எண்ணம் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில் கலெக்டர் துர்கா மூர்த்தி, பழனி தொகுதி ரவி மனோகரன் எம் எல் ஏ, நிலக்கோட்டை அய்யனார் எம்எல்ஏ, கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, பழனி ஆர்டிஓ கண்ணன், தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் எம் மகுடீஸ்வரன், நகரச் செயலாளர் மீதுன் மனோகரன், செயற்குழு உறுப்பினர் பழனிபாலன்,  ஜே பி எஸ் சஞ்சய் மணி, சிவா அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ் பி  அன்வர்தீன், தகவல் தொழில்நுட்ப அணி குகன் உள்பட ஏராளமான பங்கேற்றனர்

Spread the love