September 21, 2026

பழனி மாரியம்மன் மாசித்திருவிழா திருக்கம்பம் சாட்டப்பட்டது 

பக்தர்கள் குவிந்தனர்

 பழனி பிப்ரவரி 12 

பழனியில் புகழ்பெற்றது மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவில்  திருவிழா வட்டார அளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவில்  பழனி முருகன் கோவிலின் உப கோவில் ஆகும். இக்கோவில் திருவிழாவையொட்டி திருக்கம்பம் சாட்டப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திரிசூல வடிவிலான திருக்கம்பம், கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அப்பொழுது பெண்கள் குலவையிட்டனர். மஞ்சள் நீரும் வேப்பிலையும் கலந்த புனித நீரை ஊற்றி வழிபாடு செய்தனர். வரும் மார்ச் 17ஆம் தேதி  கொடியேற்றமும், பூவோடு வைக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 24 ஆம் தேதி    திருக்கல்யாணமும், மார்ச் 25ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Spread the love