சென்னை: இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா நேற்று தனது 21-வது பிறந்த நாளை கொண்டாடினார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் அவர், சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஃபிடே தனது எக்ஸ் வலைதள பதிவில், “தனது 12-வது வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றி, அந்த காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே இப்பட்டத்தைப் பெற்ற இரண்டாவது மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஆர்.பிரக்ஞானந்தா படைத்தார்.
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையின் உச்சபட்சமாக 2,785 ரேட்டிங் புள்ளிகளையும், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தையும் எட்டினார்.
மேலும், 2024 மற்றும் 2026 ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடர்களில் போட்டியிட்ட அவர், 2023 ஃபிடே உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கத்தையும், 2024-ம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
நமது பெருமைக்குரிய பிரக்ஞானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டும் எண்ணற்ற வெற்றிகளும் வரலாற்றுச் சாதனைகளும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளது.

More Stories
பாகிஸ்தான் வீரர் புலம்பியதை கதையாக கேட்டு சிரித்த பிரதமர் நரேந்திர மோடி
3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள்
“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” – இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC