சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு பிறகு, கடலில் கரைத்த பெருங்காயம் போல தடயமே இல்லாமல் திமுக மறைந்து போகும் என தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து, பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என். எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகம் இதுவரை கண்டிராத மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
மதுரை, திருச்சி மற்றும் மதுராந்தகம் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஏன் மவுனம் சாதிக்கிறார்? தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை பிரதமர் பட்டியலிட்டுள்ளார்.
ஆனால், ‘மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை’ என தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரின் புள்ளிவிவரங்களுக்கு பதில் அளிக்கத் தயாரா?”
பிரதமர் மோடி, 15-ம் தேதி நாகர்கோவில் வருகை தருவதற்கு முன்பாக, அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என பெண்கள் இறைவனின் சாட்சியாக சபதமேற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்குப் பிறகு, திமுக எனும் தீய சக்தி அந்தக் கடலில் கரைத்த பெருங்காயம் போலத் தடயமே இல்லாமல் மறைந்து போகும்.

More Stories
மேற்கு வங்கத்தில் மீன் உற்பத்தியில் அலட்சியம்: மம்தா அரசு மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இந்தியத் தேர்தல் திருவிழா: சர்வதேச குழுவினர் பாராட்டு
“எனக்கு நிதிஷ் குமார் நிலை ஏற்படாது” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி