சென்னை: தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம் தேதி போளூர், 5-ம் தேதி மைலம், 6-ம் தேதி விருத்தாசலம், 10-ம் தேதி தருமபுரி, 11-ம் தேதி ஓமலூர், 12-ம் தேதி சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் முறையே கிருஷ்ண மூர்த்தி, அனகை முருகேசன், பிரதாப், சரவணன், வெங்கடேசன், பிரேமலதா, இளங்கோவன், ஏ.ஆர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்கிறார். 13, 14-ல் மீண்டும் விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
15-ல் சென்னை சட்டமன்றதொகுதியிலும், 16, 17-ல் விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்தும், 18 முதல் 21-ம் தேதி வரை மீண்டும் விருத்தாசலத்திலும் பிரச்சாரம் செய்கிறார்’’ என கூறப்பட்டுள்ளது.

More Stories
அவசர ஆலோசனை கூட்டம் நடத்தும் விஜய்! தேர்தல் கருத்துக் கணிப்புக்கு பிறகு பனையூரில் குவியும் வேட்பாளர்கள்
தவெக வேட்பாளர்களுடன் சந்திப்பு.. விஜய்யின் அடுத்த திட்டம்
“வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக, கூட்டணிக் கட்சி முகவர்கள் கவனம்” – இபிஎஸ் அறிவுரை