பாட்னா: பிஹாரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தில் காலியாக உள்ள பங்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 30-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 13 ஆகும்.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சூரஜ் கட்சியின் வேட்பாளராக பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார்” என்றார்.
இந்த தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த பாஜக தலைவர் நிதின் நபீன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இந்த இடம் காலியானது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதிக்கு, அக்கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இருப்பினும், அஜய் அலோக், நீல் ரத்தன் கோஷ் மற்றும் அஜீத் குமார் லாலி உள்ளிட்டோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

More Stories
“மைலேஜ் குறைந்துவிட்டது” – E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்
இந்தியாவில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை: நீரில் முழ்கிய மும்பை.. 3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் – விவரம் இதோ
சிறார் பாலியல் வீடியோ குறித்து இன்ஸ்டாகிராமில் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்