October 29, 2026

புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு – பயணிகளுக்கு ஷாக் செய்தி

சென்னை; வண்ணாரப்பேட்டை – ராயபுரம் இடையே மின் கம்பி அறுந்து விழுந்ததால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.மின் கம்பி அறுந்ததால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரக்கோணம்,திருவள்ளூர் ,கும்மிடிப்பூண்டி ,சூலூர்பேட்டை வழித்தட ரயில்கள் தாமதாக இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அறுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..அரக்கோணம்,கும்மிடிப்பூண்டி ,கடற்கரை வழி தடத்தில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலும் தாமதமாக இயக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Spread the love