பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி ஒதியம் பிரிவு சாலையில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதனையொட்டி, பொதுக்கூட்ட மைதானம், மேடை மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளை கழக துணைப் பொதுச்செயலாளர், மேனாள் ஒன்றிய அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நேரில் பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கினார். அதுசமயம் குன்னம் வேட்பாளர் சா.சி.சிவசங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்
கீழக்கரையில் எஸ்டிபிஐ 18-ஆம் ஆண்டு தொடக்க தின பொதுக்கூட்டம்:
ஒட்டன்சத்திரத்தில்