April 17, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் விபரங்கள்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் விபரங்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: இராசிபுரம் வட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 58,226 மகளிர்பயன் பெற்றுள்ளனர். புதுமைப் பெண் திட்டம்: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3,725 மாணவியர்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி: இராசிபுரம் நகராட்சியில் 265 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.117.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 1774 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.487.60கோடிகடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவித் திட்டம்: இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 324 மகளிர் ரூ.132.75 இலட்சம் மதிப்பில் பயன்பெற்றுள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம்: இராசிபுரம் நகராட்சியில் மக்களைத் தேடி.மருத்துவம் திட்டத்தின் கீழ்16,869 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்74,983 பயனாளிகள்பயன். மகப்பேறு நிதியுதவித் திட்டம்: இராசிபுரம் நகராட்சியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிமகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2,273 கர்ப்பிணிகள் ரூ.1.23 கோடி மதிப்பில் பயன் பெற்றுள்ளனர். இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ்11,203 கர்ப்பிணிகள் ரூ.7.14 கோடி மதிப்பில் பயன்பெற்றுள்ளனர். மருத்துவஉட்கட்மைப்பு மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம்பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.2.45.கோடி மதிப்பில் 3 மருத்துவ உட்கட்டமைப்பு பணிகள் முடிவு பெற்றுள்ளது. முதலமைச்சர்காலைஉணவுதிட்டம் இராசிபுரம் நகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 12 பள்ளிகளைச் சேர்ந்த 877 மாணவ, மாணவியர்கள்பயன் பெற்றுள்ளனர். இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் முதலமைச்சரின் ‘காலை உணவு திட்டத்தின் கீழ் 143.பள்ளிகளைச் சேர்ந்த 6,688 மாணவ, மாணவியர்கள்பயன் பெற்றுள்ளனர். மதிய உணவு திட்டம்: மதிய உணவு திட்டத்தின் கீழ் இராசிபுரம் நகராட்சியில் 1,804 மாணவ, மாணவியர்களும், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 17,149மாணவ, மாணவியர்களும் பயன் பெற்றுள்ளனர். இல்லம் தேடி.கல்வி திட்டம்: இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு.53,218 மாணவ, மாணவியர்கள் ரூ.2.39 கோடி மதிப்பில் பயன்பெற்றுள்ளனர். எண்ணும் எழுத்தும் திட்டம்: எண்ணும் எழுத்தும்.திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு 8012 மாணவ, மாணவியர்கள் ரூ.1.48 கோடி மதிப்பில்.பயன் பெற்றுள்ளனர். திறன்மிகு வகுப்பறைகள்: திறன்மிகு வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடி மதிப்பில்102 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்: ரூ.2.43 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு பணிகள்: ரூ.7.12 கோடி மதிப்பில் 188 பள்ளி உட்கட்டமைப் புபணிகள். நான்முதல்வன்திட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இராசிபுரம் வட்டத்தில் 28,569 இளைஞர்களுக்கு திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்ப் புதல்வன் திட்டம் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் இராசிபுரம் வட்டத்தில் 3,443 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். சமூக பாதுகாப்பு திட்டம் இராசிபுரம் வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.84 கோடி மதிப்பில் 22,698 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். வீட்டுமனைபட்டா வழங்குதல்: இராசிபுரம் வட்டத்தில் வீட்டுமனை. பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 8,637 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். நாரைகிணறு பகுதிமக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று 814 நபர்களுக்கு ரூ.32.84 கோடிமதிப்பீட்டில் 723 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உதவிகள்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 975 மாற்றுத்திறனாளிளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் மற்றும்.உதவித்தொகை வழங்கப்பட்டது. தாயுமானவர் திட்டம்: இராசிபுரம் வட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 12,304 பயனாளிகள் இல்லத்திற்கு நேரடியாக பொது விநியோக பொருட்கள.வழங்கப்பட்டு வருகிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் பொங்கல் திருநாளை முன்னிட்டு.விலையில்லா.வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ்1,61,026 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். .. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம்: நாமகிரிபேட்டை வட்டத்தில் அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்குரூ.1.06 கோடிமதிப்பில்.கடனுதவி வழங்கப்பட்டது. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 42.பயனாளிகளுக்கு ரூ.77.57 இலட்சம் மதிப்பில் கடனுதவி. பிரதமமந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை மற்றும் இராசிபுரம் வட்டத்தில் 68 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.67 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு த்திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை மற்றும் இராசிபுரம் வட்டத்தில்10 பயனாளிகளுக்கு ரூ.3.36 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டம்: கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 81 அனைத்து வகைகை வினை கலைஞர்களுக்கு ரூ.18.17 இலட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவு திட்டம்: முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் ரூ.3.66 கோடி மதிப்பில் 63 தனி நபர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்பெற்றுள்ளனர். ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் இராசிபுரம் வட்டத்தில் 92 ஆதிதிராவிடர் பழங்குடியிர் இனத்தைச் சார்ந்த தொழில் முனைவோருக்கு ரூ.3.56 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் மற்றும் நகைக்கடன்: கூட்டுறவுத் துறையின் மூலம் இராசிபுரம் வட்டத்தில் 12,026 விவசாயிகளுக்கு ரூ.664.39 கோடி மதிப்பில் பயிர் கடன்மற்றும் 2,28,879 பயனாளிகளுக்கு ரூ.1,750.00 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடன் தள்ளுபடி: 12,930 பயனாளிகளுக்கு ரூ.63.00 கோடி நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம்: கலைஞரின் அனைத்து.கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்31,946 விவசாயிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் ஆழ்துளை கிணறுகள், பண்ணைக் குட்டைகள், வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. வேளாண் இயந்திரமாக்கல் திட்டம்: வேளாண்மை இயந்திர மாக்கல் திட்டத்தின் கீழ்192 விசாயிகளுக்கு ரூ.3.59 கோடி மதிப்பில் விதைப்பு முதல்.அறுவடை வரை பயன்படும் இயந்திரங்கள்.மானியவிலையில் வழங்கப்பட்டுள்ளது. தோட்டக் கலைத்துறையின் மூலம்.இடுபொருட்கள் வழங்குதல்: தோட்டக் கலைத்துறையின் மூலம் 2,288 விவசாயிகளுக்கு ரூ.3.37 கோடிமதிப்பில் தோட்டக்கலை.இடுபொருட்கள், பசுமைகுடில்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் திட்டம்: நுண்ணீர் பாசனம் திட்டத்தின் கீழ் ரூ.48.19.கோடி.மதிப்பில் 4,739 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர் .

Spread the love