July 7, 2026

பொற்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்வர் பகவந்த் மான் படத்துடன் அடையாள அட்டை அணிந்து வர தடை

அமிர்தசரஸ்: பஞ்​சாப் பொற்​கோ​யிலுக்கு வரும் பக்​தர்​கள் முதல்வர் பகவந்த் மான் படத்​துடன் கூடிய அடை​யாள அட்டை அணிந்து வரக்​கூ​டாது என எஸ்​ஜிபிசி உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த மாதம், ஒரு சர்ச்​சைக்​குரிய வீடியோ விவ​காரத்​தில் பஞ்சாப் முதல்​வர் பகவந்த் மானை சீக்​கிய மத குரு​மார்​கள் ‘குரு துரோகி’ என்று அறி​வித்​தனர். சீக்​கியர்​களின் உச்​சக்​கட்ட மத அமைப்​பான அகால் தக்த், அந்த வீடியோ​வின் அடிப்​படை​யில் பகவந்த் மானை ‘குரு துரோகி’ மற்​றும் ‘கல்சா பந்த் விரோ​தி’ என்று அறி​வித்​தது.

இருப்​பினும், அந்த வீடியோ​வில் இருப்​பது தான் இல்லை என்​றும், அதில் உள்​ளவர் தன்​னைப் போன்ற முகமூடியை அணிந்திருந்தார் என்​றும் மான் தரப்​பில் கூறப்​பட்​டது. இந்நிலையில், பஞ்​சாப் மாநில அரசின் இலவச ‘முதலமைச்​சர் தீர்த்த யாத்​திரை திட்டத்தின்’ கீழ் அமிர்​தசரஸ் பொற்​கோ​யிலுக்கு வந்த பக்​தர்​கள், முதல்​வர் பகவந்த் மான் புகைப்​படம் கொண்ட அடை​யாள அட்டைகளை அணிந்​திருந்​தனர்.

இதையடுத்​து, அந்த அடை​யாள அட்​டையை அகற்​று​மாறு ஷிரோமணி குருத்​வாரா பிரபந்​தக் கமிட்டி (எஸ்​ஜிபிசி) அதிரடிப்​படை​யினர் கேட்​டுக் கொண்​டனர். குருத்​வா​ரா​வுக்​குள் எந்​த​வித விளம்​பரங்​களுக்​கும் அனு​ம​தி​யில்லை என்​ப​தால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தாக அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார். இது தொடர்​பான வீடியோ சமூக ஊடகங்​களி​லும் வைரலாகியுள்ளது.

‘முதலமைச்​சர் தீர்த்த யாத்​திரை திட்​டம்’ என்​பது 50 வயதுக்கு மேற்​பட்ட பஞ்​சாப் மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆன்​மிகத் தலங்களுக்கு இலவச​மாகச் சென்று வர அனு​ம​திக்​கும்​ ஒரு திட்டமாகும்​.

Spread the love