July 21, 2026

மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

சென்னை: இட ஒதுக்​கீட்​டுக்​கான தேசிய பெண்​கள் கூட்​டமைப்பு மற்​றும் தமிழ்​நாடு அனைத்து பெண்​கள் கூட்​டமைப்​பின் சார்பில், அனைத்​திந்​திய ஜனநாயக மாதர் சங்​க பொதுச் செய​லா​ளர் ராதி​கா, இந்​திய மாதர் தேசிய சம்​மேளனத்​தின் மாநிலத் தலை​வர் மஞ்​சுளா, ஜனநாயக மாதர் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் பரிமளா ஆகியோர் சென்னையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

இந்த நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரில் பெண்​களுக்​கான இடஒதுக்​கீடு மசோ​தாவை எந்​த​வித நிபந்​தனை​யும் இன்றி அமல்​படுத்த வேண்​டும். நாடாளு​மன்​றம் தொடங்​கிய நாள்​முதல் முடி​யும் நாள்​வரை தொடர்ச்​சி​யாக எங்​கள் கூட்​டமைப்பு சார்​பில் போராட்​டம் நடை​பெறும்.

நாளை (22-ம் தேதி) அனைத்து பெண்​கள் கூட்​டமைப்பு சார்​பாக ஆளுநர் மாளிகை முற்​றுகைப் போராட்​டம் நடை​பெறும்.

மக்​கள் தொகை கணக்​கெடுப்​பு, தொகுதி மறுவரையறை போன்ற மசோ​தாக்​கள் கூட்​டத்​தொடரில் வரு​கிறது என்​பதை காரணம் காட்டி மகளிர் இட ஒதுக்​கீடு மசோ​தாவை காலம் தாழ்த்​தக் கூடாது என வலி​யுறுத்தி இந்த போராட்​டம் நடை​பெறும்.

இதன் ஒரு பகு​தி​யாக மதச்​சார்​பற்ற கூட்​டணி கட்​சித் தலை​வர்​களை சந்​தித்து பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோ​தாவை தாக்​கல் செய்ய குரல் கொடுக்க வேண்​டும் என வலி​யுறுத்த உள்​ளோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Spread the love