பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ஆந்திர அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர்களின் இழப்பீட்டை சரிக்கட்டவும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியான வகையில் உதவவும் ’ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆட்டோ, டாக்சி மற்றும் கேப் ஆகியவற்றை வைத்து தொழில் செய்து வரும் தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் (2026-27) ரூ.231.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு பழைய வாகனங்களுக்கான பசுமை வரியும் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், ’ஸ்திரீ சக்தி’ என்ற பெயரில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.175 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
இந்தியன் வங்கி & பாங்க் ஆஃப் பரோடா.வங்கி– மொத்தம் 2,337 காலியிடங்கள்
அடுத்தடுத்து முடங்கும் அமெரிக்க சேவைகள்…