February 11, 2026

மக்காச்சோளம் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மக்காச்சோளம் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மக்காச்சோளம் கொள்​முதலை தமிழக அரசு உடனடி​யாக தொடங்க வேண்​டும் என தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து அச்​சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி கூறிய​தாவது: பெரம்​பலூர், கள்​ளக்​குறிச்​சி, அரியலூர், தூத்​துக்​குடி, நெல்​லை, விருதுநகர், தென்​காசி, தரு​மபுரி மற்றும் கோடை சாகுபடி​யாக தமிழகத்​தின் பல மாவட்​டங்​களில் மக்காச்சோளம் சாகுபடி பெரும் அளவு செய்​யப்​படு​கிறது.

தற்​போது அறு​வடை தொடங்​கி​யுள்ள நிலை​யில் இதன் விலை குவிண்​டால் ரூ.1,600 அளவில் தான் வியா​பாரி​கள் மூலம் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. ஒரு ஏக்​கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்​யப்​படு​கிறது, ஓரளவுமுறை​யான உற்​பத்தி என்​றால் ஏக்​கருக்கு சராசரி 15 குவிண்​டால் மகசூல் கிடைக்​கும்.

ஆனால் தீவிர பருவ மழை, உரிய மழை​யின்​மை, நோய் பாதிப்பு போன்ற காரணங்​களால் அதி​கபட்​சம் ஏழு முதல் ஒன்​பது குவிண்​டால் மட்​டுமே தற்​போது சோளம் மகசூல் கிடைக்​கிறது.

தற்​போது சந்தை விலை ஒரு குவிண்​டாலுக்கு சராசரி ரூ.1,600 அளவில் உள்​ளது. ஆக ஏக்​கர் ஒன்​றுக்கு பத்​தா​யிரம் ரூபாய் அளவில் விவ​சா​யிகளுக்கு இழப்பு ஏற்​படு​கிறது.

குறைந்​த​பட்ச ஆதார விலை​யாக குவிண்​டால் ரூ.3,545 என அரசு அறி​வித்​துள்​ளது. அதில் சரி​பாதி தான் தற்​போது கிடைக்​கிறது. வியா​பாரி​கள் மட்​டுமே கொள்​முதல் செய்து வரும் நிலை​யில் இந்த விலை இழப்பை விவ​சா​யிகள் சந்​திக்​கின்​றனர்.

மத்​திய அரசு விலையை நிர்​ண​யித்​தால் மட்​டும் போதாது. இந்த நெருக்​கடி​யான நிலை​யில் அரசே மாவட்​டங்​களில் மக்காச்சோளம் கொள்​முதலை உடனடி​யாக தொடங்க வேண்​டும். அரசின் கொள்​முதல் மேற்​கொள்​வதற்​கான கட்​டமைப்​பும், வேளாண் துறை​யின் மார்க்​கெட்​டிங் கமிட்​டி​யும் இருக்​கிறது.

இதை பயன்​படுத்தி விவ​சா​யிகளை பாது​காக்க அண்டை மாநிலங்​களைப் போல இழப்​பீட்டு மானி​யம் வழங்கி ஈடு செய்து விவ​சா​யிகளை காத்​திட அவசர நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

Spread the love