மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. CBI விசாரணை நடக்கிறது.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார் மீது நகை காணாமல் போனதாக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவலர்கள் தாக்கியதால் மறுநாள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகைத் திருட்டு என்பதே போலி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வழக்கில் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

More Stories
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ – அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு: 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்