October 9, 2026

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.

முதல் சுற்றுக்குப் பின் தாராபுரத்தில் அதிமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது தவெக மீண்டும் முன்னிலை வகித்து வருவது கவனிக்கத்தக்கது.

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்:

தவெக – மரகதம் குமரவேல்: 27,184

திமுக – பரந்தாமன்: 18,379

அதிமுக – கனிதா சம்பத்: 15,893

சிபிஎம் – பி.சுகந்தி: 455

நாதக – ஜானகிராமன்: 641

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின.  22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தாராபுரம் முன்னிலை நிலவரம்:

தவெக – சத்யபாமா: 21,034

அதிமுக – பானுமதி: 19,730

திமுக – சுகன்யா: 17,898

இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன் – 455

நாதக – கார்த்திகா – 1632

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

தட்டாஞ்சாவடியில் என்.ஆர் காங்கிரஸ் வெற்றி:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. 4 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அங்கு என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4876 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளார் விநாயகம் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

Spread the love