October 24, 2026

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக்​ இந்தியாவுக்கு வெளியே தங்க கூடுதல் அனுமதி

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக்​ மற்​றும் உக்​ரைனைச் சேர்ந்த ஆறு பேருக்கு இந்தியாவுக்கு வெளியே தங்​கு​வதற்கு வழங்​கப்​பட்ட அனுமதியை, டெல்லி நீதி​மன்​றம் அடுத்த ஆண்டு பிப்​ரவரி 24 வரை நீட்​டித்து நேற்று உத்தர​விட்​டது.

மியான்​மரில் இன அடிப்​படை​யி​லான ஆயுதக் குழுக்​களுக்​குப் பயிற்சி அளித்​த​தாகக் கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டுகளின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அமெரிக்​காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்​டைக்​ மற்​றும் உக்​ரைனைச் சேர்ந்த ஆறு பேரை மார்ச் மாதம் கைது செய்​தது. கடுமையான பிரிவு​களைக் கொண்ட சட்​ட​விரோத நட​வடிக்​கைகள் (தடுப்பு) சட்​டத்​தின்​கீழ் கைது செய்​யப்​பட்ட இவர்​கள் மீதான அந்​தப் பிரிவு​களை, செப்டம்பரில் தாக்​கல் செய்த குற்​றப்​பத்​தி​ரி​கை​யில் தேசிய புலனாய்வு முகமை நீக்​கி​விட்​டது.

தேசிய புலனாய்வு முகமை தாக்​கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஏழு பேர் மீதும் குடியேற்​றம் மற்​றும் வெளிநாட்​டினர் சட்​டப் பிரிவு​கள் மட்​டுமே சுமத்​தப்​பட்​டுள்​ளன. இவை சமரசத்​தின் மூலம் முடித்​துக்​கொள்​ளக்​கூடிய குற்​றங்​கள். அச்​சட்​டத்​தின் கீழ் கூறப்​பட்ட மீறல்​களுக்​கான சமரசக் கட்டணத்தை வான்​டைக் செலுத்​தி​யதையடுத்து, கடந்த மாதம் அவருக்கு நீதி​மன்​றம் சட்​டப்​படி உரிமையான ஜாமீன் வழங்கியது.

மேத்யூ ஆரோன் வான்​டைக் ஒரு மாத காலத்​திற்​குத் தனது சொந்த நாட்​டுக்​குத் திரும்ப அனுமதிக்​கப்​பட்​டிருந்​தார். விசா​ரணை​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என்ற நிபந்​தனையுடன், வான்​டைக் மற்​றும் ஆறு உக்​ரைன் நாட்​ட​வர்​கள் தங்​கள் நாடுகளுக்​குத் திரும்ப டெல்லி நீதி​மன்​றம் அனுமதித்​தது. நேற்று நடந்த நீதி​மன்ற விசா​ரணைக்​காக மேத்யூ ஆரோன் வான்​டைக் இந்​தியா திரும்பினார். ஆனால், ஆறு உக்​ரைன் நாட்​ட​வர்​கள் இன்​னும் இந்தி​யா​வுக்​குத் திரும்​பவில்லை.

விசா​ரணை​யின்​போது வழக்​கின் பல அம்​சங்​களில் விசா​ரணை நடத்​தக் கூடுதல் நேரம் தேவை என்று தேசிய புலனாய்வு முகமை கோரிக்கை விடுத்​தது. இந்​நிலை​யில், வான்​டைக்​ மற்​றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேரும் இந்​தி​யா​வுக்கு வெளியே தங்​கு​வதற்கு வழங்​கப்​பட்ட அனுமதியை, டெல்லி நீதி​மன்​றம் அடுத்த ஆண்டு பிப்​ரவரி 24 வரை நீட்​டித்து உத்​தர​விட்​டது.

Spread the love