October 24, 2026

இந்து தமிழ் திசை ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் நாளை மகளிர் திருவிழா கொண்டாட்டம்

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் சென்​னை​யில் நாளை (அக். 25) மகளிர் திரு​விழா நடை​பெற​விருக்​கிறது.

முற்​றி​லும் பெண்​களுக்​காக அசத்​தலான போட்​டிகள், பேச்​சரங்​கம், கலை நிகழ்ச்​சி, பரிசுகளு​டன் கொண்​டாட்​டம் நடை​பெறவுள்​ளது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பல்​வேறு சிறப்​புப் பகு​தி​களில் ஒன்​றான, ‘பெண் இன்​று’ சார்​பில், இந்த ஆண்​டும் தூத்​துக்​குடி, கடலூர், மதுரை, வேலூர், கோவை ஆகிய நகரங்​களில் மகளிர் திரு​விழா சிறப்​பாக நடை​பெற்​றது.

அவற்​றைத் தொடர்ந்து சென்​னை, திரு​வான்​மியூரில் உள்ள வேல்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் மகளிர் திரு​விழா நாளை நடக்கிறது.

காலை 9 மணிக்​குத் தொடங்​கும் இவ்​விழா மாலை வரை நடை​பெறும். இவ்​விழா​வில், காவல்​துறை முன்​னாள் கூடு​தல் இயக்​குநர் வே.வனிதா ஐ.பி.எஸ். சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​ கொண்டு பெண்​களின் பாது​காப்பு குறித்து உரை​யாற்​றுகிறார்.

பின்னர், கண்​கவர் கலை நிகழ்ச்​சிகள் நடை​பெறும். வாசகியருக்கு ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்​தல், கயிறு இழுத்​தல் உள்​ளிட்ட கலகலப்​பான பல்​வேறு போட்​டிகளும் நடை​பெற​விருக்​கின்​றன. போட்​டிகளில் வெற்றி பெறு​பவர்​களுக்​குச் சிறப்​புப் பரிசும், கலந்து கொள்​ளும் அனை​வருக்​கும் பரிசுகளும் வழங்​கப்​படும்.

85 வருட பாரம்​பரி​யம் மிக்க உதயம் இட்லி அரிசி, பருப்பு வகைகள் நிறு​வனத்​துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்​துகிறது.

மேலும், லலிதா ஜூவல்​லரி,  ஐஸ்​வர்யா சாரீஸ், ரெபியூட் வாட்​டர், மஹாத்ரி ஃபுட்​ஸ், ஹெல்த் பாஸ்​கெட், சத்யா ஏஜென்​சீஸ், ருச்சி ஊறு​காய், அட்​வென்​சர் மீடியா ஹவுஸ், வர்த்​த​மானன் பதிப்​பகம், சவுபாக்யா என்​டர்​பிரைசஸ், காட்​டன் ஹவுஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி ஆகிய நிறு​வனங்​களும் நிகழ்ச்​சியை இணைந்து வழங்​கு​கின்​றன.

இந்த நிகழ்ச்​சி​யின் டிவைன் பார்ட்​னர் கிரி, ஹெல்த் பார்ட்​னர் ரெயின்போ சில்​ரன்ஸ் ஹாஸ்​பிடல்​ஸ், வென்யூ பார்ட்​னர் வேல்ஸ் பல்​கலைக்​கழகம் – திரு​வான்​மியூர் வளாகம், பிவெரேஜ் பார்ட்​னர் கோத்​தாஸ் காபி.

மகளிர் திரு​விழா​வில் பங்​கேற்​கும் வாசகி​கள் அனை​வருக்​கும் மதிய உணவும் நிச்​சயப் பரிசும் உண்​டு. மகளிர் திரு​விழா​வில் 18 வயதுக்கு மேற்​பட்ட பெண்​கள் அனை​வரும் பங்​கேற்​கலாம். ஆண்​களுக்கு அனு​மதி இல்​லை. விழா​வில் பங்​கேற்க அனு​மதி இலவசம். நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​க 9600038796 என்​கிற எண்​ணுக்​கு ‘மிஸ்​டு கால்​’ கொடுங்​கள்​.

Spread the love