July 6, 2026

முதல்வர் விஜய்க்கு நெருக்கடி.. கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் -தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட 1,000 மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பதவியேற்று 2 மாதங்களை நிறைவு செய்யது. இந்த நிலையில், சமீப நாட்களாக சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர் மின் வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சூழலில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது தமிழக அரசுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மூலம் தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், 3, 4, 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அரசியல் அனாதை ஆனதா திமுக?அதிரடியாக மாறிய TVK பக்காவாக அரசியல் செய்யும் Vijay

கூடங்குளம் அணு மின் நிலைய தொழில்நுட்பக் கோளாறு

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.43 மணியளவில் முதல் அணு உலையில் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஜெனரேட்டரின் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணு உலையின் மின் உற்பத்தி உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த 562 மெகாவாட் மின்சாரம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மின் விநியோகத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின் உற்பத்தி நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறை விரைவாக சரிசெய்ய இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர்கள், பொறியாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பழுதை முழுமையாக சரிசெய்த பிறகு, இன்னும் சில நாட்களுக்குள் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே இடையிடையே மின்தடை ஏற்பட்டுவரும் சூழலில், கூடங்குளம் முதல் அணு உலையின் தற்காலிக நிறுத்தம் மின் விநியோகத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே, மின் தேவை அதிகமாக இருக்கும் பகுதிகளில் வரும் நாட்களில் மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு சற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு இதனால் தமிழக அரசுக்கு ஏற்படும் நெருக்கடி என்ன?

  • கூடங்குளம் முதலாவது அணு உலையிலிருந்து மத்திய தொகுப்பு மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின்சாரம் உடனடியாகத் தடைபட்டுள்ளது. ஏற்கனவே கோடைகாலக் கோரிக்கைகள் மற்றும் மின் சுமை காரணமாக மின் விநியோகத்தில் சவால்கள் இருக்கும் நிலையில், இந்த திடீர் 562 மெகாவாட் பற்றாக்குறை மின் விநியோகத்தை பாதிக்கும்.
  • திடீரென ஏற்பட்ட இந்த தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், மாநிலத்தின் மின் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்யவும் தமிழக அரசு வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இது ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மின்வாரியத்திற்கு கூடுதல் நிதிச் சுமையை உருவாக்கும்.
  • திடீர் மின் பற்றாக்குறை காரணமாகப் பரவலாக ஆங்காங்கே மின்வெட்டு அல்லது லோட் ஷெடிங் (Load shedding) செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். இதனால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அரசிடம் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வழிவகுக்கும்.
  • அணுமின் நிலையத்தின் மின்சாரம் என்பது தொடர்ந்து கிடைக்கக்கூடிய ‘பேஸ்-லோட்’ (Base-load) மின்சாரமாகும். அதை ஈடுசெய்ய நீர்மின்சாரம் அல்லது காற்றாலை மின்சாரத்தை உடனடியாக முழுமையாக நம்ப முடியாது. எனவே, வெப்ப மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும், இதற்கு நிலக்கரி இருப்பு மற்றும் கூடுதல் உள்கட்டமைப்புச் சவால்கள் எழும்.
Spread the love