June 20, 2026

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: நாளை முதல் வழங்கப்படும்

மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை: மூத்த குடிமக்​களுக்​கான கட்​ட​ணமில்லா பேருந்து பயண டோக்​கன்கள் நாளை முதல் வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் வெளி​யிட்ட அறிக்​கை: மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்​களுக்​கான ஜூலை 2026 முதல் டிசம்​பர் 2026 வரை பயன்​படுத்​தக்​கூடிய ஒரு மாதத்​துக்கு 10 டோக்​கன்​கள் வீதம் 6 மாதத்​துக்​கான கட்​ட​ணமில்லா பேருந்து பயண டோக்​கன்​கள் வழங்​குதல் மற்​றும் அடை​யாள அட்டை புதுப்​பித்​தல், புதிய பயனாளிக்கு வழங்​குதல் ஆகியவை அடை​யாறு, தீவுத்​திடல், சைதாப்​பேட்​டை, தண்​டை​யார்​பேட்​டை, ஆவடி, கிளாம்​பாக்​கம் என முக்​கிய பணிமனை​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​கள் என 39 மையங்​களில் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 வரை விடு​முறை​யின்றி அனைத்து நாட்​களி​லும் வழங்​கப்​படும்.

அதன் பின்​னர், ஆக.1 முதல் டிச.20-ம் தேதி வரை வழக்​கம்​போல் அந்​தந்த பணிமனை அலு​வல​கங்​களில், அலு​வலக நாட்​களில் அலு​வலக நேரத்​தில் வழங்​கப்​படும்.

சென்​னையை சார்ந்த மூத்த குடிமக்​கள் இத்​தகைய கட்​ட​ணமில்லா பயண டோக்​கன்​கள் மற்​றும் அடை​யாள அட்​டைகள் புதி​தாக பெற இருப்​பிட சான்​றாக குடும்ப அட்​டை, வயது சான்று (ஆதார் அட்​டை, ஓட்​டுநர் உரிமம், கல்​விச் சான்​றிதழ், வாக்​காளர் அடை​யாள அட்​டை) மற்​றும் 2 வண்ண புகைப்​படங்​கள் சமர்ப்​பித்து கட்​ட​ணமில்லா பயண டோக்​கன்​களை பெற்​றுக் கொள்​ள​லாம். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Spread the love