September 21, 2026

மேற்கு ஆசியப் போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்

டெஹ்ரான்: மேற்​காசிய போரை நிறுத்த அமெரிக்கா​வுக்கு 7 நிபந்தனை​களை ஈரான் விதித்​துள்​ளது. இந்த நிபந்​தனை​களை நிராகரித்​தால் போருக்கு தயா​ராக உள்​ளோம் என்​றும் ஈரான் எச்சரிக்கை விடுத்​திருக்​கிறது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்​கியது. சுமார் 7 மாதங்​களாக இருதரப்பு இடையே போர் நீடித்து வரு​கிறது. ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுதக் கிடங்​கு​களை குறி​வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வரு​கிறது. இதற்கு பதிலடி​யாக சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்தி வருகிறது.

போரை நிறுத்த அமெரிக்​கா, ஈரான் இடையே கத்​தார் அரசு சமரச முயற்​சிகளில் ஈடு​பட்டு வரு​கிறது. இதுகுறித்து ஈரானின் தேசிய பாது​காப்பு கவுன்​சில் செய​லா​ளர் மொஹ்சென் ரெஸாயீ நேற்று கூறிய​தாவது: போரை நிறுத்த அமெரிக்கா​வுக்கு 7 நிபந்தனைகளை விதித்​துள்​ளோம். கத்​தார் வாயி​லாக இந்த நிபந்தனை​களை அமெரிக்​கா​விடம் அளித்​திருக்​கிறோம். ஈரானுக்கு எதி​ரான தாக்​குதல்​களை நிறுத்த வேண்​டும்.

முடக்​கப்​பட்ட ஈரானின் நிதி ஆதா​ரங்​களை விடுவிக்க வேண்​டும். ஈரான் துறை​முகங்​களை குறி​வைத்து கப்​பல் போக்​கு​வரத்து முடக்​கப்​பட்டு இருக்​கிறது. எங்​களது கப்​பல்​களின் சுதந்​திர​மான கடல்​வழி போக்​கு​வரத்தை உறுதிசெய்ய வேண்​டும். இவை உள்ளிட்ட 7 நிபந்​தனை​களை விதித்​திருக்​கிறோம். அமெரிக்காவின் பதி​லுக்​காக காத்​திருக்​கிறோம். எங்​களது நிபந்தனை​களை நிராகரித்​தால் போருக்கு தயார் நிலை​யில் உள்ளோம். இவ்​வாறு மொஹ்சென் ரெஸாயீ தெரி​வித்​துள்​ளார்.

மேலும் பிரிட்​டனின் ஆர்​ஏஎப் விமானப் படைத் தளம் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்களில் பி1பி உள்​ளிட்ட அதிநவீன போர் விமானங்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

இராக், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபி​யா, ஈரான், கத்தார், லெப​னான், குவைத், ஜோர்​டானில் வசிக்​கும் அமெரிக்கர்கள் எச்​சரிக்​கை​யாக இருக்​கும்​படி அந்​தந்த நாடுகளுக்​கான அமெரிக்க தூதரகங்​கள் எச்​சரிக்கை விடுத்துள்ளன. எனவே அமெரிக்​கா, ஈரான்​ இடையே மீண்​டும்​ மிகப்​பெரிய போர்​ ஏற்​படக்​கூடும்​ என்​று தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

Spread the love