April 13, 2026

மேற்கு வங்கத்தில் மீன் உற்பத்தியில் அலட்சியம்: மம்தா அரசு மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்​கம் ஹல்​தி​யா​வில் நடை​பெற்ற பாஜக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: மேற்கு வங்க மாநிலத்​தில் மம்தா ஆட்​சி​யில் மீன் உற்​பத்தி மிக​வும் குறைந்துவிட்​டது. பிஹாரில் மீனவர்​களின் நலனுக்​காகப் பாஜக பல்​வேறு பணி​களை மேற்​கொண்​டதன் விளை​வாக, அங்கு மீன் உற்​பத்தி இரு மடங்​காக உயர்ந்​துள்​ளது.

இங்கு மீன்​களுக்​கான தேவை மிக அதி​க​மாக இருந்த போதி​லும், அதற்​கான உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தில் மாநில அரசு முற்​றி​லும் தோல்​வியடைந்து உள்​ளது. இதனால் மீன் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த 15 ஆண்​டு​களில் மீன் விநி​யோகத்தை அதி​கரிக்​க​வும், மீன் உற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய​வும் டிஎம்சி அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. தேர்​தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்​தால், மேற்கு வங்​கத்தை மீன்​வளம் மற்​றும் கடல் உணவு உற்​பத்​தி​யில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக மாற்​றும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

இதனிடையே வடக்கு 24 பர்​கா​னா​வின் அகர்​பா​ரா​வில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் மம்தா பானர்ஜி பேசுகை​யில்,”பிரதமர் மோடி வைக்​கும் மீன் மீதானக் குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தும் பொய். பிஹாரில் மீன் உற்​பத்தி உண்​மை​யில் அதிகரிக்கவில்லை. மாறாக அங்கு மீனுக்​கான தேவை குறைந்துவிட்​டதே காரணம். பிஹாரில் உள்ள மக்​களை மீன் சாப்பிடவே நீங்​கள் அனு​ம​திப்​ப​தில்​லை. ராஜஸ்​தான், பிஹார் மற்றும் உத்​தரப் பிரதேச மாநிலங்​களில் உள்ள மக்​களை மீன், முட்டை மற்​றும் இறைச்சி சாப்​பிட நீங்​கள் அனு​ம​திப்​ப​தில்​லை.

அத்​தகைய பொருட்​களை விற்​பனை செய்​யும் கடைகள் மூடப்பட்டு வரு​கின்​றன. வங்​காள மக்​களுக்கு மீன் சாப்​பிடு​வது எப்​படி என்று நீங்​கள் பாடம் எடுக்க வேண்​டாம். பாஜக​வினர் உங்களை மீன் சாப்​பிட விட​மாட்​டார்​கள். நீங்​கள் இறைச்சி சாப்பிட முடி​யாது, முட்டை சாப்​பிட முடி​யாது, வங்​காள மொழியில் பேச முடி​யாது. மீறிப் பேசி​னால், உங்​களை ‘வங்​க தேசத்​தவர்’ என்று முத்​திரை குத்​து​வார்​கள்” என தெரி​வித்​தார்.

Spread the love