இந்திய ரயில்வேயில் பயணம் செய்யக்கூடிய லட்சக்கணக்கான ரயில்
பயணிகளுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை இந்திய ரயில்வே
வெளியிட்டிருக்கிறது.ரயில் பயணிகள் தங்களுடைய உறுதி செய்யப்பட்ட
டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிமுறைகளும், போர்டிங் பாயிண்ட்
விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரக்கூடிய இந்த
மாற்றங்களை ரயில் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
திருத்தி அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய ரயில் டிக்கெட் ரத்து விதிமுறையின்
படி பயணிகள் தங்களுடைய ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு
முன்னர் தங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்யும்போது
அவர்களுக்கு அதிகபட்ச பணம் ரீஃபண்ட் ஆக கிடைக்கும். அதாவதி
டிக்கெட் ரத்துக்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே அபராதமாக
பெறப்படும்.
அதே வேளையில் 72 மணி நேரத்தில் இருந்து ரயில் புறப்படும் 24 மணி
நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது மொத்த டிக்கெட்
கட்டணத்தில் 25% கழித்துக் கொள்ளப்படும், அதேபோல ரயில்
புறப்படுவதற்கு 24 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை
ரத்து செய்யும் போது டிக்கெட் கட்டணத்தில் 50 % அபராதமாக பிடித்துக்
கொள்ளப்பட்டு மீதமுள்ள தொகை தான் ரீஃபண்ட் ஆக கிடைக்கும்.ரயில்
புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் எந்த
ஒரு ரீஃபண்டும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக
பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட்டை மாற்றிக் கொள்வதற்கான
வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. ரயில் புறப்படுவதற்கு 30
நிமிடங்களுக்கு முன்னர் வரை பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட்
அதாவது தாங்கள் ரயில் ஏறக்கூடிய நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம்.
எழும்பூரில் ஏற முடியாதவர்கள் தாம்பரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்
கிண்டியில் ஏற முடியாதவர்கள் செங்கல்பட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
அந்த வகையில் பயணிகளின் போர்டிங் பாயிண்ட் விதிமுறைகளும் மாற்றி
அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு போர்டிங் பாயின்ட் மாற்றம்
என்பது சார்ட் தயாரிப்புக்கு முன்பு வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு
இருந்தது. தற்போது ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை
மாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தரகர்கள் பலரும் முன் கூட்டியே
பல்க்காக டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு ரயில் புறப்படும் முன்பு
திடீரென அதனை ரத்து செய்கிறார்கள். இதில் அதிக பணம் ரீ ஃபண்ட்
கிடைப்பதால் இதனை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் இதனால்
சாதாரண மக்களுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கிடைப்பதில்
சிக்கல் நீடிப்பதால் டிக்கெட் ரத்து விதிமுறைகளை மாற்றியுள்ளதாக
ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை
ரத்து செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு தலா 180 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி
(டிக்கெட்டை வகுப்பை பொறுத்து மாறும்) பிடித்தம் செய்யப்படும், இது
இப்போது 72 மணிநேரம் முன்பு என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு
ரயில் புறப்படும் 4 மணி நேரம் முன்பு வரை டிக்கெட் ரத்து செய்யப்பட்டால்
கூட 50% தொகை ரீஃபண்ட் கிடைக்கும், ஆனால் இப்போது 8 மணி நேரம்
முன்பு வரை என மாற்றப்பட்டுள்ளது.

More Stories
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? – முதல்வர் ஸ்டாலின்
தேர்தலை முன்னிட்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு
தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.152 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்