June 17, 2026

ராமநாதபுரம் மாவட்டம்

சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி ஆட்சியர் கிராம மக்கள் மனு 

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் ஊராட்சியில் ஆறு மாதங்களாக முடங்கிக் கிடக்கும் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இந்திரா நகர்–காட்டூரணி வழியாக இளமனூர், மாடக்கொட்டான் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் சாலைப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு வழங்கினர்

Spread the love