June 2, 2026

ஸ்ரீ முருகன் வைகாசி விசாக விழாக் குழுவினர் நடத்திய54 ஆம் ஆண்டு வைகாசி விசாக உத்சவ விழா

54 ஆவது ஆண்டு வைகாசி விசாக உத்ஸவ விழா 30.05.2026 அதிகாலை முதல்  இரவு வரை மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி மடம் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
மாலை நடைபெற்ற திருப்புகழ் இசை வழிபாடு, காவடி சிந்து மற்றும் இன்னிசை பாடல்கள் திண்டுக்கல் குமார் குழுவினர், பெங்களூரு குமாரி தபஸ்யா வைத்தியநாதன் குழுவினரின் வள்ளி திருமணம் சங்கீத உபன்யாசம். ஷண்முகார்ச்சனை சிருங்கேரி சங்கர மடம் ஸ்கந்த சஷ்டி குழுவினரின் ஸ்கந்த சஷ்டி கவசம் மற்றும் ஸுப்ரமண்ய புஜங்கம் பாராயணம். நிருத்தியாலயா நாட்டிய பள்ளி நாட்டிய நண்மணி செல்வி கணேஷ் பள்ளியினரின் பரத நாட்டியம் சிறப்பாக நடைபெற்றது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “பக்தி வெள்ளம் ‘என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகையில் உள்ளத்தால், சேவையால், பண்பினால், வீரத்தால், பிறரை மதிக்கும் வாழ்வியலால் நாம் வளரும் தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும், அழகன் முருகனுக்கு பிறந்த நாள் கொண்டாடும் பக்தி வெள்ளம் இது. இந்த தேசத்தின் அடையாளம் ஆன்மிகம். வளரும் தலைமுறைக்கு நமது வேதங்களின் சிறப்பினை உணர்த்தும் உன்னதப் பணியை இந்த வைகாசி விசாக விழாக் குழுவினர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகின்றனர்.
இது உலகம் முழுவதும் உள்ள மனிதகுல மேன்மைக்காக மாநகர் மதுரையில் வேத விற்பன்னர்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் வேள்வி. பூஜ்ய ஸ்ரீ ராமானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்ட பெருமக்கள் ஆசி வழங்கினர். பரதம், பாட்டு, ருத்ர ஜபம், லஷார்ச்சனை, திருப்புகழ் இசை, தெய்வத் தீந்தமிழ் இன்னிசை, குழு பஜன், டோலோத்ஸவம், ஸ்ரீ ஆஞ்சநேய உத்சவம் என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது பாராட்டுக்குரியது என்றார்.
விழாக் குழு செயலாளர்ஆர். சத்தியமூர்த்தி, தலைவர் ஆர். விஸ்வநாதன், துணைத் தலைவர் ஆர். கோபாலகிருஷ்ணன் என்ற ஸ்ரீதர், பொருளாளர் ஆர்.சுப்பிரமணியன், தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர், குருதிக் கொடையாளர் இல. அமுதன், இல.புவனேஷ், அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர்,, எஸ் பி ஐ  நாராயணன், அம்பி, டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி,டாக்டர் டி. ராமசுப்பிரமணியன், டிவிஎஸ் மேனாள் பி ஆர் ஓ. வீரசுந்தரம், ஜெ.பாஸ்கர், கிருஷ்ணன், கண்ணன் பாகவதர், பொறியாளர் கண்ணன், ஏ வி பிரபாகரன் என ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அனைவருக்கும் உணவு ஏற்பாடு, விழாக் குழுவினர் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Spread the love