புதுடெல்லி: முப்படைகள் தங்களுக்கு தேவையான தளவாடங்களை வாங்குவது பற்றி பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலிடம் விருப்பம் தெரிவிக்கும். இதற்கு முதல்கட்டமாக பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்கும். இதற்கு இறுதி ஒப்புதல் பெறப்பட்டபின் இந்த தளவாடங்களை வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தரைப்படை பயன்பாட்டுக்காக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் தரங் என்ற ஆயுதம், டேங்க்குகளை தாக்கி அழிக்கக் கூடிய இலகு ரக ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணைகள், குறுகிய தூர வான் பாதுகாப்பு ஆயுதம், டேங்க்குகளுக்கான பாதுகாப்பு கருவிகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காமிகாஸ் ட்ரோன் ஆகியவை தேவை என விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
கடற்படை பயன்பாட்டுக்காக கண்ணி வெடிகள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவும் டரோன்கள், எலக்ட்ரிக் உந்து விசை கருவிகளுக்கான பரிசோதனை மையம் ஆகியவை தேவை என விருப்பம் தெரிவிக்கப்பட்டது. விமானப்படை பயன்பாட்டுக்காக எப்டபிள்யூ -எச்ஏபிஎஸ் கண்காணிப்பு கருவி தேவை என விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்த தளவாடங்களை ரூ.52,000 கோடிக்கு வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

More Stories
“வாக்குத் திருட்டு, சீட் திருட்டு, காணிக்கை திருட்டு நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது” – ஜெயராம் ரமேஷ்
பாகிஸ்தானியர்கள் உட்பட 23 பேரை பயங்கரவாதிகள் என அறிவித்தது மத்திய அரசு
மும்பை, தானேவில் தொடரும் கனமழை: ஜூலை 6 வரை ரெட் அலர்ட்