திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சித் துறையில் 2,538 பொறியாளர் நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்க தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு அனுமதி வழங்கியது.
நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணியாளர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.634 கோடி லஞ்ச முறைகேடு வழக்கு
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நியமனங்களில் ரூ.634 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.
ஆளுநர் உரை….ஸ்கோர் செய்த தவெக?
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
கே.என்.நேரு மீது எழுந்த புகார்
இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கே.என்.நேரு தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்புத்துறை எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது
விசாரணையின்போது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை திரும்பப் பெற தற்போதைய அரசு அனுமதி கோரியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.என்.நேரு தரப்பு, தங்களது விளக்கத்தை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற இடைக்காலத் தடை தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.
முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், தவெக ஆட்சியில் ஊழல் ஈடுப்பட்ட பணங்கள் அனைத்தும் மீண்டும் காஜனாவில் கொண்டு சேர்த்து வருகிறது. மேலும், தவெக அரசு ஊழல் செய்யாது. செய்யவும் மாட்டோம். செய்பவகளையும் விடமாட்டோம். கடந்த ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன்னதாக ஆட்சி நடத்தியவர்களையும் விடமாட்டோம் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளியிட பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
எரிசக்தி துறையில் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்