March 24, 2026

வடமாநிலத்தவர்கள் மீது தொடரும் வன்முறை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

வடமாநிலத்தவர்கள் மீது தொடரும் வன்முறை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: திமுக ஆட்சியில் வடமாநிலத் தவர்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப் பதாவது: நெல்லை மாவட்டம் விக் கிரமசிங்கபுரம் அருகே அடை யக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணி புரிந்து வரும் வடமாநிலப் பெண்ணை, சூளைக்குள் வைத்தே பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில் பெண் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் நாளுக்குநாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக, வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது.

பொது வெளியில் வட இந்தியர் களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்ப வன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் இழிவாகப் பேசுவதுதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம்.

மாற்றாந்தாய் மனப்பான்மை: வேற்றுமையில் ஒற்றுமை யைப் போற்றும் நமது நாட்டில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக் குடன் அணுகும் திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love