May 4, 2026

விஜய் வீட்டிற்கு நேரில் சென்ற த்ரிஷா: தமிழக வெற்றிக் கழகத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து சந்திப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், நடிகை த்ரிஷா விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தற்போதைய நிலவரப்படி 106 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


விஜய் வீட்டிற்கு வந்த திரிஷா

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பலரும் கொண்டாடி வரும் வேளையில், நடிகை த்ரிஷாவின் வருகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று மே 4-ம் தேதி நடிகை த்ரிஷாவின் 43-வது பிறந்தநாள் ஆகும். முன்னதாக தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி திருமலை வேங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்த த்ரிஷா, அங்கிருந்து நேரடியாக சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

  

by Taboola

Sponsored Links

You May Like

Trade Smarter with IBKRInteractive Brokers

வைரலாகும் வீடியோக்கள்

வெள்ளை நிற காரில் விஜய்யின் வீட்டிற்குள் த்ரிஷா நுழையும் காட்சிகள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அவரைப் படம் பிடிக்கப் புகைப்படக் கலைஞர்களும், ஊடகத்தினரும் விஜய்யின் வீட்டின் முன் பெருமளவில் திரண்டனர். பிங்க் நிற உடையில் புன்னகையோடு காட்சியளித்த த்ரிஷா, விஜய்யைச் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பு

தேர்தல் முன்னிலையில் 100 இடங்களைக் கடந்து TVK முன்னேறுவது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கட்சியின் தேர்தல் வெற்றி, மறுபுறம் நெருங்கிய தோழி த்ரிஷாவின் பிறந்தநாள் என விஜய்யின் இல்லமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


தொடரும் விவாதங்கள்

ஏற்கெனவே இவர்களைப் பற்றிப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், இந்தச் சந்திப்பு சமூக வலைதளங்களில் விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.

Spread the love