May 5, 2026

பெரம்பலூர் தொகுதியில் தவேக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கர் வெற்றி பெற்றனர்.

பெரம்பலூர்‌.மே,5-

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை. இரா, தமிழ்செல்வம், திமுக சார்பில் டாக்டர் ஜெயலட்சுமி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகன்யா என முக்கிய வேட்பாளர்களாக களம் கண்டனர்.

இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சிவசங்கர், அதிமுக கூட்டணியில் சரண்யாவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரேவதியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்தி வாசனும் முக்கிய வேட்பாளராக களத்தில் இருந்தன ர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் சிவகுமாருக்கும் அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கும் கடுமையான போட்டி நிலவியது. அதன் பின்னர் தவெக வேட்பாளர் சிவகுமாருக்கும் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சிமிக்கும் கடுமையான போட்டி நிலவியது இறுதியாக சிவக்குமார் 89776 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

குன்னம் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் சிவசங்கரன் முன்னிலை பெற்று வந்தார் இரண்டாவது இடத்தில் அதிமுக சரண்யாவும், மூன்றாவது இடத்தில் ரேவதியும் பெற்றிருந்தனர். கடைசி கட்ட நிலவரப்படி திமுக சார்பில் சிவசங்கர் 84003வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Spread the love