September 1, 2026

“விதைகளால் ஆன விநாயகரை வழிபடுங்கள்” – பொதுமக்களுக்கு நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்​திக்கு விதை களால் ஆன விநாயகர் சிலையை வீட்​டில் வைத்து வழிபட வேண்​டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

‘கிரீன் இந்​தியா சேலஞ்ச்’ அமைப்​பின் தலை​வரும், முன்​னாள் நாடாளு​மன்ற உறுப்​பினரு​மான சந்​தோஷ் குமார், இந்த ஆண்டு முற்​றி​லும் இயற்​கை​யான முறை​யில், விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்​துள்​ளார். இச்​சிலையை நடிகர் சிரஞ்​சீவி நேற்று ஹைத​ரா​பாத்​தில் அறி​முகம் செய்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசும்​போது, “வர​விருக்​கும் விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்​டு, கிரீன் இந்​தியா சேலஞ்ச் அமைப்​பினர் விதைகளால் ஆன மிக அழகிய விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்​ளனர். இச்​சிலைகள் சுற்​றுச்​சூழலை எந்த வகையிலும் பாதிக்​காது. இவற்றை வீட்​டில் வைத்து பூஜை செய்த பின்​னர், அவர​வர் வீடு​களி​லேயே தண்​ணீரில் கரைக்​கலாம்.

அவ்​வாறு கரைக்​கப்​படும் இடத்​தில் செடிகள் முளைக்​கும். இது விநாயகரின் ஆசீர்​வாதம் நமக்​குக் கிடைப்​ப​தைப் போன்​ற​தாகும். எனவே, இம்​முறை அனை​வரும் ‘விதை விநாயகரை’ வைத்​து, சுற்றுச்​சூழலை பாதிக்​காத வகை​யில் விநாயகர் சதுர்த்​தி​யைக் கொண்டாடி மகிழ்​வோம்” என்​றார். கிரீன் இந்​தியா சேலஞ்ச் அமைப்​பு இது​வரை இந்​தியா முழு​வதும் 20 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்​துள்​ளது.

Spread the love