September 1, 2026

மும்பை, டெல்லியை முந்திய பெங்களூரு – உலகின் சிறந்த இரவுப் பொழுது நகரங்கள்

பெங்களூரு: உலகள​வில் புகழ்​பெற்ற ‘டைம் அவுட்’ நிறு​வனம், ‘இன்ட்​ரெபிட் டிராவல்’ அமைப்​புடன் இணைந்து நடத்​திய ஆய்வின் அடிப்​படை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான ‘உல​கின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்​கள்’ பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதில், இந்​தி​யா​வின் தொழில்​நுட்​பத் தலைநகர​மான பெங்​களூரு, 17-ம் இடம் பிடித்​துள்​ளது. சர்​வ​தேச அளவில் உணவு மற்​றும் கலாச்சா​ரத்​துக்​காக பெங்​களூரு ஏற்​கெனவே 13-ம் இடம் பிடித்திருந்த நிலை​யில், தற்​போது இரவுக் கலாச்​சா​ரத்​தி​லும் உலக வரைபடத்​தில் இடம்​பிடித்​துள்​ளது.

இரவுப் பொழுது அமைப்​பு​களின் தரம், பாது​காப்​பு, கட்டண மலிவு, சமூகக் கலாச்​சா​ரம் மற்​றும் பன்​முகத்​தன்மை ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் உள்​ளூர் மக்​களிடம் நடத்​தப்​பட்ட வாக்​கெடுப்பு மற்​றும் சர்​வ​தேச வல்​லுநர்​களின் மதிப்​பீட்​டின்​படி பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

அதில், பாரம்​பரிய​மான நடனக் கூடங்​களைத் (நைட்​கிளப்​ஸ்) தாண்​டி, நேரலை இசை நிகழ்ச்​சிகள், நகைச்​சுவை மன்​றங்​கள், கிராஃப்ட் பியர் விடு​தி​கள், கலை நயம்​மிக்க காக்​டெய்ல் பார்​கள் மற்​றும் பாப் கஃபேக்​கள் அடிப்படையில் பெங்​களூரு 17-ம் இடம் பிடித்​துள்​ளது. அதே​நேரம் நாட்​டின் தலைநக​ரான டெல்​லி, வர்த்தக தலைநக​ரான மும்பை ஆகியவை இந்​தப் பட்​டியலில் இடம்​பெற​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​தப் பட்​டியலில் தாய்​லாந்து தலைநகர் பாங்​காக் உலகின் முதன்மை இரவுப் பொழுது நகர​மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜெர்​மனி​யின் பெர்​லின் 2-ம் இடத்தையும், அமெரிக்​கா​வின் நியூ​யார்க் 3-ம் இடத்​தை​யும் பெற்றுள்​ளன. மெல்​போர்ன் (ஆஸ்​திரேலி​யா) மற்​றும் சாவ் பாலோ (பிரேசில்) ஆகிய நகரங்​கள் முறையே 4 மற்​றும்​ 5-ம்​ இடங்​களைப்​ பிடித்​துள்​ளன.

Spread the love