நடிகர் ரஜினிகாந்த் “வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியது குறித்து…

நடிகர் ரஜினிகாந்துடன் வித் லவ் பட நாயகன் அபிஷன் ஜீவிந்Insta/Abishan jeevinth
நடிகர் ரஜினிகாந்த் “வித் லவ்” படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்து வெளியான புதிய திரைப்படம் “வித் லவ்”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப். 6 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “வித் லவ்” படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை இன்று (பிப். 10) நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேலும், இப்படம் வெளியான 3 நாள்களில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy
மதுரை பின்னணியில் ஜீவா நடிக்கும் படம்! | Jiiva | Lark Studios
சூரியின் `மண்டாடி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Soori | Mandaadi