November 3, 2026

ஸ்ரீராமபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு பெட்டகம் வழங்கல்!

ஒட்டன்சத்திரம். நவ

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஸ்ரீராமபுரம் பேரூர் கழகச் செயலாளர் அ. அருள்குமார், பேரூர் மகளிர் அணி அமைப்பாளர் தி. அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஸ்ரீராமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு பெட்டகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், கிளை மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள், மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

தங்களின் உழைப்பையும் சேவையையும் மதித்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துச் சென்றனர்.

Spread the love