March 22, 2026

ஃபைனான்ஸ் விருதுநகர், மார்ச் 19

விருதுநகரில் சிறு தொழில் நிறுவனங்களுக்கான தனது புதிய LAP கிளையைத் தொடங்கும் ECL ஃபைனான்ஸ் விருதுநகர், மார்ச் 19: எடல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வங்கிசாரா நிதி நிறுவன (NBFC) பிரிவான, ECL ஃபைனான்ஸ் லிமிடெட் (ECLF), விருதுநகர் நகரில் சிறுதொழில் நிறுவனங்களுக்கு சொத்து மீதான கடன் (LAP) வழங்கும் சிறப்பு நோக்கத்துடன் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் ஒரே நாளில் 19 புதிய கிளைகளைத் திறக்கும் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது. விருதுநகர் நகரில் அமைகின்ற இந்த புதிய கிளை சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன்களை, எளிமையாகவும் சரியான நேரத்திலும் வழங்குவதற்கான நோக்கத்துடன் திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களைக் கொண்ட விருதுநகர், தொழில்முனைவுக்கான முன்னெடுப்புகளின் வளர்ச்சிக்கு கணிசமான வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ECL ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் குரானா, “வளர்ந்து வரும் வணிகச் சந்தைகளில் கடன் வசதிகளைப் பெறுவதை எளிதாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் விருதுநகர் ல் நாங்கள் தொடங்கியுள்ள இந்தப் புதிய கிளை இதன் மீதான எமது பொறுப்புறுதிக்கு எடுத்துக்காட்டாகும். 19 கிளைகளை இரு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தொடங்குவதன் மூலம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுள்ள நிதி உதவிகளைச் சரியான நேரத்தில், நாங்கள் இந்தக் கிளைகளின் மூலம் வழங்குவோம். இத்தொழில் நிறுவனங்களின் வணிகம் வளர்ச்சி பெறுவதற்கு உதவும் வகையில் எங்களின் பணிகளை இதன் மூலம் நாங்கள் விரைவுபடுத்துகிறோம்,” என்று கூறினார்.

Spread the love