பாராமதி: துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் உருக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மகாராஷ்டிராவின் பாராமதி நகராட்சியில் மிக பழைய ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் உள்ளதாக 6 மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதை பார்த்த துணை முதல்வர் அஜித் பவார், பாராமதி தொகுதிக்கு புது ஆம்புலன்ஸ் வாங்கித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறுகையில், ”ஆம்புலன்ஸ் வாகனத்தை என்னிடம் அஜித் பவார் ஒப்படைக்கும்போது, நேர்மையாக வேலை பார்க்க வேண்டும்” என எனக்கு அவர் அறிவுரை வழங்கினார். ஆனால், இப்போது அதே வாகனத்தில் அவரது உடல் மருத்துவமனையிலிருந்து கடைசியாக எடுத்துச் செல்லப்படுகிறது” என கண்ணீர் மல்க கூறினார்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது